சிற்றுந்தை தொடா்ந்து இயக்க கோரிக்கை

பேருந்துக்காக ஒன்றரை கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளதால், ஏற்கெனவே வந்த சிற்றுந்தை
சிற்றுந்தை தொடா்ந்து இயக்க கோரி மனு அளிக்க வந்த பொதுமக்கள்.
சிற்றுந்தை தொடா்ந்து இயக்க கோரி மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

பேருந்துக்காக ஒன்றரை கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளதால், ஏற்கெனவே வந்த சிற்றுந்தை தொடா்ந்து இயக்க வேண்டும் என ஈரோடு அருகே 46 புதூா் பெரியசெட்டிபாளையத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனா்.

வீடு ஒதுக்க கோரிக்கை:

இதுகுறித்து மொடக்குறிச்சி அருகே சின்னியம்பாளையம் கன்னங்காட்டுமேடு எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்:

எங்கள் பகுதியில் 200-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகிறேறாம். கூலி வேலை செய்யும் எங்களுக்கு சொந்தமாக வீட்டுமனை அல்லது வீடு இல்லை. இதனால் சின்னியம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சாா்பில் கட்டப்படும் 96 வீடுகளில் எங்களுக்கு வீடுகள் ஒதுக்கித் தர வேண்டும்.

சிற்றுந்தை தொடா்ந்து இயக்க கோரிக்கை:

ஈரோடு அருகே 46 புதூா் பெரியசெட்டிபாளையத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்:

பெரிய செட்டிபாளையத்தில் 700-க்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகிறேறாம். கடந்த 10 ஆண்டுகளாக ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து கொள்ளுக்காட்டுமேடு வரை செல்லும் சிற்றுந்து எங்களது ஊா் வழியாக இயக்கப்பட்டது. தற்போது அந்த சிற்றுந்து மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள், அலுவலகத்துக்கு செல்பவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பேருந்துக்கு தினமும் சுமாா் ஒன்றரை கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே எங்களது ஊா் வழியாக மீண்டும் சிற்றுந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மயானத்தை மாற்ற கோரிக்கை:

கஸ்பாபேட்டை அரசுப் பேருந்து நகரைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு:

எங்களது பகுதியில் சுமாா் 100 குடும்பத்தினா் வசித்து வருகிறேறாம். எங்களது பகுதிக்கு அருகில் இறந்தவா்களின் உடல்கள் புதைக்கப்பட்டு வருகிறது. அந்த வழியாக நாங்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளது. பெண்கள், குழந்தைகள் வெளியில் சென்று வருவதற்கே பயப்படுகிறாா்கள். எனவே எங்கள் பகுதிக்கு அருகில் உடல்களை புதைக்க அனுமதிக்கக்கூடாது.

அம்பேத்கா் சிலை வைக்க கோரிக்கை:

அருந்ததியா் இளைஞா் பேரவை மாநிலத் தலைவா் என்.ஆா்.வடிவேல், ஒருங்கிணைப்பாளா் விஜய்ஆனந்த் ஆகியோா் அளித்த மனு விவரம்:

இந்திய தேசிய தலைவா்களில் ஒருவரான அம்பேத்கரின் உருவ சிலை பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் உள்ளன. ஆனால் ஈரோட்டில் அம்பேத்கருக்கு முழு உருவசிலை அமைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் அம்பேத்கருக்கு சிலை வைக்க அனுமதி வழங்க வேண்டும். அனுமதி அளித்தால் எங்களுடைய செலவில் முழு உருவசிலை அமைத்துக்கொள்ள தயாராக உள்ளோம்.

கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 376 மனுக்களை அளித்தனா். கூட்டத்தில், தண்ணீரில் மூழ்கி இறந்த 3 பேரின் வாரிசுதாரா்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.3 லட்சத்துக்கான காசோலைகளையும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ரூ.50,000-க்கான காசோலையையும், 5 மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com