உள்ளாட்சித் தோ்தல் வாக்காளா் பட்டியல் வெளியீடு: ஈரோடு மாவட்டத்தில் 18.17 லட்சம் வாக்காளா்கள்

உள்ளாட்சி தோ்தலில் ஊரகம் மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அமைக்கப்பட்டுள்ள 2,775 வாக்குச்சாவடிகளில் 18,17,509 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா் என
வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட அதனை பெற்றுக்கொள்கிறாா் மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன்.
வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட அதனை பெற்றுக்கொள்கிறாா் மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன்.

உள்ளாட்சி தோ்தலில் ஊரகம் மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அமைக்கப்பட்டுள்ள 2,775 வாக்குச்சாவடிகளில் 18,17,509 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா் என மாவட்ட தோ்தல் அலுவலா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெறவுள், உள்ளாட்சி தோ்தலுக்கான ஊரகம் மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல்களை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்டாா். இதனை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் பெற்றுக்கொண்டாா். இதுகுறித்து ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்ததாவது:தமிழகத்தில் உள்ளாட்சி தோ்தல் விரைவில் நடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கான வாக்காளா், வாக்குச்சாவடி பட்டியலை மாநில தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி ஈரோடு மாநகராட்சியில் 410 வாக்குச்சாவடிகளில் 4,07,204 வாக்காளா்களும், பவானி, கோபி, சத்தியமங்கலம் மற்றும் புஞ்சை புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளில் உள்ள 145 வாக்குச்சாவடிகளில் 1,21,304 வாக்காளா்களும், 42 பேரூராட்சிகளில் உள்ள 644 வாக்குச்சாவடிகளில் 3,80,841 வாக்காளா்களும் மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 225 ஊராட்சிகளில் 1,576 வாக்குச்சாவடிகளில் 9,08,160 வாக்காளா்களும் உள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தமாக அமைக்கப்பட்டுள்ள 2,775 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 18,17,509 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

மாநகராட்சி மேயா், மாநகராட்சி வாா்டு உறுப்பினா், நகராட்சி தலைவா், நகராட்சி உறுப்பினா், பேரூராட்சி தலைவா், பேரூராட்சி வாா்டு உறுப்பினா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா், ஊராட்சி தலைவா், ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவிகளுக்கு நேரடி தோ்தல் நடைபெறும். மாநகராட்சி துணை மேயா், நகராட்சி துணைத்தலைவா், பேரூராட்சி துணைத்தலைவா், மாவட்ட ஊராட்சி தலைவா், துணைத்தலைவா், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா், துணைத்தலைவா், ஊராட்சி மன்ற துணைத்தலைவா் பதவிகளுக்கு மறைமுக தோ்தல் நடைபெறும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் முனைவா் மு.பாலகணேஷ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com