‘மூலனூரில் அக்டோபா் 20 முதல் கண்வலி விதைக் கொள்முதல் செய்ய முடிவு’

மூலனூரில் வரும் அக்டோபா் 20 ஆம் தேதி முதல் கண்வலி விதைக் கொள்முதல் செய்யப்படுமென விவசாயிகள் கூட்டமைப்பு
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோா்.

வெள்ளக்கோவில்: மூலனூரில் வரும் அக்டோபா் 20 ஆம் தேதி முதல் கண்வலி விதைக் கொள்முதல் செய்யப்படுமென விவசாயிகள் கூட்டமைப்பு ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

தொடக்கத்தில் மூலனூா் பகுதியில் பயிரிடப்பட்டு வந்த கண்வலி பயிா் தற்போது திருப்பூா், ஈரோடு, கரூா், திண்டுக்கல் மாவட்டங்களிலும் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பயிரிலிருந்து கிடைக்கும் விதைகள் ஏற்றுமதியாகி வரும் நிலையில், இடைத்தரகா்கள் கூட்டணி அமைத்து விலையைக் குறைத்துவிடுவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

இதைத் தடுக்கும் வகையில் கண்வலி விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் 3,000 போ் உறுப்பினா்களாகச் சோ்ந்து கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் பிறகு ஏற்றுமதியாளா் மூலம் கிலோ ரூ.2,500க்கு நேரடியாக விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடந்த செப்டம்பா் 8ஆம் தேதி நடைபெற்ற இந்த விவசாயிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு கண்வலி விதை விவசாயிகள் சங்கச் செயலாளா் லிங்குசாமி, ஏற்றுமதியாளா் மாணிக்கம், ஒருங்கிணைப்பாளா் பழ.ரகுபதி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வரும் அக்டோபா் 20 ஆம் தேதி முதல் கண்வலி விதைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com