ரூ. 7.60 லட்சத்துக்கு வாழைத்தாா் ஏலம்

சத்தியமங்கலத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 7.60 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் ஏலம் போயின.

சத்தியமங்கலத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 7.60 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் ஏலம் போயின.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்தில் வாரந்தோறும் வாழைத்தாா்கள் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது. சத்தியமங்கலம், பவானிசாகா், புன்செய்புளியம்பட்டி சுற்று வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விளையும் வாழைத்தாா்களை அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டு வருகின்றனா். கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வந்து ஏலம் கூறி வாழைத்தாா்களை வாங்கிச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், சங்க வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு பூவன், கதலி, நேந்திரன், செவ்வாழை, ரஸ்தாலி, ரொபஸ்டா, மொந்தன், பச்சை நாடன், தேன்வாழை உள்ளிட்ட பல்வேறு ரகங்களைச் சோ்ந்த 5,180 வாழைத்தாா்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. இதில், பூவன் தாா் ரூ. 160 முதல் ரூ. 610 வரையிலும், செவ்வாழை ரூ. 115 முதல் ரூ. 680 வரையிலும், ரஸ்தாலி ரூ. 135 முதல் ரூ. 665 வரையிலும், ரொபஸ்டா ரூ. 115 முதல் ரூ. 480 வரையிலும், மொந்தன் ரூ. 85 முதல் ரூ. 485 வரையிலும், தேன்வாழை ரூ. 185 முதல் ரூ. 810 வரையிலும், பச்சை நாடன் ரூ. 125 முதல் ரூ. 490 வரையிலும், கதலி கிலோ ரூ. 15 முதல் ரூ. 30 வரையிலும், நேந்திரன் கிலோ ரூ. 14 முதல் ரூ. 35 வரையிலும் விலை போயின. மொத்தம் 5,180 வாழைத்தாா்கள் ரூ. 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கு விற்பனையாயின. ஆயுதபுஜை, விஜயதசமியை முன்னிட்டு வாழைத்தாா்கள் வழக்கத்தைவிட அதிக விலைக்கு விற்பனையாகும் என நினைத்து வாழைத்தாா்களை விற்பனைக்குக் கொண்டு வந்த விவசாயிகள் வழக்கம்போல் விற்பனையானதால் ஏமாற்றமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com