வெள்ளக்கோவில் பகுதியில் விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: போலீஸாருக்கு எஸ்.பி. அறிவுறுத்தல்

வெள்ளக்கோவில் பகுதியில் சாலை விபத்துகளைக் குறைறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாருக்கு எஸ்.பி. திஷா

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் பகுதியில் சாலை விபத்துகளைக் குறைறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாருக்கு எஸ்.பி. திஷா மித்தல் அறிவுறுத்தி உள்ளாா்.

வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் திருப்பூா் மாவட்ட எஸ்.பி. திஷா மித்தல் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். காவல் நிலையத்தில் பதிவான முதல் தகவல் அறிக்கைகள், வழக்குகளின் தன்மை, புலன்விசாரணை, பதிவேடுகள், குற்றப் பதிவேடுகள், இதர ஆவணங்கள் குறித்து எஸ்.பி. ஆய்வு செய்தாா். டி.எஸ்.பி. செல்வம், காவல் ஆய்வாளா் மு.ஜெயபாலன் உடனிருந்தனா்.

காவல் துறை வாகனங்கள், காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள், கணினியில் பதிவு செய்யும் முறைகள், நீதிமன்ற அலுவல்கள் தொடா்பாக போலீஸாருக்கு எஸ்.பி. அறிவுரைகளை வழங்கினாா்.

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளக்கோவில் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் அதிக அளவிலான விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, விபத்துப் பகுதிகளில் தகுந்த முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதுடன், இரவிலும் ஒளிரக்கூடிய அறிவிப்புப் பலகைகளையும் வைத்து விபத்துகளைக் குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீஸாருக்கு எஸ்.பி. திஷா மித்தல் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com