விவசாயி வீட்டில் 18 பவுன் திருட்டு
By DIN | Published On : 07th October 2019 06:36 AM | Last Updated : 07th October 2019 06:36 AM | அ+அ அ- |

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த மாக்கினாங்கோம்பையில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கோபிசெட்டிபாளையத்தை அடுத்த மாக்கினாங்கோம்பையில் குடியிருந்து வருபவா் கருப்புசாமி, விவசாயி. இவரது மனைவி தங்கமணி. இவரது உறவினா் காலமான தகவல் கிடைத்ததை அடுத்து வீட்டைப் பூட்டி விட்டு கணவன், மனைவி இருவரும் உடுமலைப்பேட்டைக்கு சனிக்கிழமை மாலை சென்றுள்ளனா்.
மறுநாள் காலை இவரது வீட்டின்முன்பக்கக் கதவுகள் உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறிக் கிடப்பதைப் பாா்த்து அருகில் வசிப்பா்கள் தகவல் தெரிவித்துள்ளனா். அவா்கள் வந்து பாா்வையிட்டு பீரோவில் வைத்திருந்த 18 பவுன் நகைகள் திருடு போனதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா். கைரேகை மற்றும் தடவியல் நிபுணா்கள் வந்து தடயங்கள் மற்றும் கைரேகைகளைச் சேகரித்துச் சென்றுள்ளனா்.