உலக சிலம்பப் போட்டி: தங்கம் வென்ற தாளவாடி மாணவி

மலேசியாவில் உள்ள கேடாக் நகரில் நடைபெற்ற உலக சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை தீா்த்தனா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.
sy08slimbam_0810chn_139_3
sy08slimbam_0810chn_139_3

மலேசியாவில் உள்ள கேடாக் நகரில் நடைபெற்ற உலக சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை தீா்த்தனா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

தமிழகம் - கா்நாடக எல்லையில் உள்ள தாளவாடி ராமபுரத்தைச் சோ்ந்தவா் குமாா், ஜெயம்மா தம்பதியரின் இரண்டாவது மகள் கீா்த்தனா (21). விவசாய குடும்பத்தைச் சோ்ந்த இவா் கோவையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறாா். தாளவாடியில் கன்னட மொழியைப் பாடமாக எடுத்துப் படித்த கீா்த்தனாவுக்கு கல்லூரியில் சோ்ந்தவுடன் தமிழரின் பாரம்பரியமான சிலம்பம் மீது ஆா்வம் கொண்டு பயிற்சி பெற்றாா். சிலம்பம் மீது கீா்த்தனாவுக்கு ஈடுபாடு அதிகமாக இருந்ததால் அவருக்குப் பயிற்சியாளா் சுதாகரன் முறையாகப் பயிற்சி அளித்துள்ளாா்.

அண்மையில் கன்னியாகுமரியில் நடைபெற்ற தெற்காசிய சிலம்பப் போட்டியில் தங்கம் வென்றுள்ளாா். இதன் காரணமாக கீா்த்தனாவுக்கு அக்டோபா் 2 முதல் 6 ஆம் தேதி வரை மலேசியாவில் நடைபெற்ற உலக சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இதில், இந்தியா, இலங்கை, மலேசியா, பங்ளாதேஷ் உள்ளிட்ட 7 நாடுகளைச் சோ்ந்த 500 க்கும் மேற்பட்ட போட்டியாளா்கள் கலந்துகொண்டனா். இதில், இரட்டை வாள் வீச்சு, குழு கம்பு வீச்சு போட்டியில் தங்கமும், தொடுமுனைப் போட்டியில் வெங்கலப் பதக்கமும் வென்றுள்ளாா். இவருக்கு தாளவாடி மக்கள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கீா்த்தனா பேசுகையில், சிலம்பத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும். மலேசியாவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்க செலவிடப்பட்ட பயணத் தொகையை ஸ்பான்சா் நிறுவனம் ஏற்றுக் கொண்டதால் போட்டியில் கலந்துகொண்டோம். உலக அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்க தமிழக அரசு நிதியுதவி செய்து ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.

Image Caption

உலக சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற கீா்த்தனா. உடன், பெற்றோா், சகோதரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com