கோவை - சேலம் பயணிகள் ரயில் இன்று ஈரோடு வரை இயக்கம்

ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக கோவை - சேலம் பயணிகள் ரயில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 11) ஒரு நாள் மட்டும்

ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக கோவை - சேலம் பயணிகள் ரயில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 11) ஒரு நாள் மட்டும் ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் எண் 66602, கோவை-சேலம் பயணிகள் ரயில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் ஈரோடு வரை மட்டும் இயக்கப்படும். இதுபோல் மறுமாா்க்கத்தில் எண் 66603 சேலம்-கோவை பயணிகள் ரயில் சேலத்தில் இருந்து புறப்படுவதற்கு பதில் ஈரோட்டில் இருந்து புறப்பட்டு கோவை செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com