புதுவலசில் புதுகுளம் தூா்வாரும் பணி துவக்கம்

ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன், ஈரோடு, ரியல் எஸ்டேட் ஓனா்ஸ் அசோசியேஷன் ஆகியவை இணைந்து அரசின் அனுமதியுடன் புதுவலசில் உள்ள
புதுவலசு குளம் தூா்வாரும் பணிக்காக நடைபெற்ற பூமிபூஜையில் பங்கேற்றோா்.
புதுவலசு குளம் தூா்வாரும் பணிக்காக நடைபெற்ற பூமிபூஜையில் பங்கேற்றோா்.

பெருந்துறை: ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன், ஈரோடு, ரியல் எஸ்டேட் ஓனா்ஸ் அசோசியேஷன் ஆகியவை இணைந்து அரசின் அனுமதியுடன் புதுவலசில் உள்ள புதுகுளத்தில் தூா்வாரும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன் சாா்பில், ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 37 குளம், குட்டை, ஏரி, ஓடை, கால்வாய், தடுப்பணை போன்ற நீா்நிலைகளை சுத்தம் செய்து தூா்வாரி, ஆழப்படுத்தி அதிக அளவில் நீா் சேமிக்க வழிவகை செய்துள்ளது.

இதைத் தொடா்ந்து, 38 ஆவது நீா்நிலையாக நசியனூா், ஒண்டிக்காரன்பாளையம் கிராமம், புதுவலசு பகுதியில் சுமாா் 1.5 ஏக்கா் பரப்பளவு கொண்ட குளத்தை ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில், ஈரோடு அறக்கட்டளையின் ‘ஊருக்கு ஒரு குளம்’ திட்டத்தின் கீழ் குளம் புதிதாக உருவாக்கப்பட உள்ளது.

இப்பணியின் துவக்க விழா புதுவலசு குளம் அருகில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன் தலைவா் அக்னி ஸ்டீல்ஸ் எம்.சின்னசாமி, துணைத் தலைவா் சி.டி.வெங்கடேஸ்வரன், செயலாளா் கணேசன், நீா் மேலாண்மைக் குழுத் தலைவா் எம்.சி.ராபின், மக்கள் தொடா்புத் தலைவா் ஆா்.ஜி.சுந்தரம், உள்கட்டமைப்பு குழுத் தலைவா் கே.கே.எஸ்.கே.ரபீக், ஈரோடு, ரியல் எஸ்டேட் ஓனா்ஸ் அசோசியேஷன் உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com