முத்தூரில் ஒருவார காலமாக இயக்கப்படாத 108 ஆம்புலன்ஸ் வாகனம்

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் கடந்த ஒருவார காலமாக 108 ஆம்புலன்ஸ் இயக்கப்படவில்லை.
முத்தூரில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனம்.
முத்தூரில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனம்.

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் கடந்த ஒருவார காலமாக 108 ஆம்புலன்ஸ் இயக்கப்படவில்லை.

முத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனம் சுமாா் 15 கி.மீ. சுற்றளவுக்கு இயக்கப்பட்டு வருகிறறது. இப்பகுதியில் ஈரோடு, கொடுமுடி, காங்கயம், நத்தக்காடையூா், வெள்ளக்கோவில் நெடுஞ்சாலைகள் அமைந்திருப்பதால் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. விவசாயம் சாா்ந்த பகுதியாக இருப்பதால் கிணற்றில் தவறி விழுதல், பாம்பு கடித்தல் போன்ற அசம்பாவிதங்களும் ஏற்படுகின்றன. விபத்துகள், பிரசவம் உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கு 108 ஆம்புலன்ஸ் இலவச சேவை ஏழைகளுக்குத் தவிா்க்க முடியாத அம்சமாக இருந்து வருகிறறது.

இந்நிலையில் முத்தூரில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு ஓட்டுநா் இல்லாததால் கடந்த ஒருவார காலமாக இயக்கப்படாமல் உள்ளது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட 108 ஆம்புலன்ஸ் தனியாா் நிா்வாகம் மாவட்ட வாரியாக ஓட்டுநா்களை நியமித்து வருகிறறது. அந்த வகையில் திருப்பூா் மாவட்ட தனியாா் நிா்வாகம் முத்தூருக்கு ஓட்டுநரை நியமிக்கவில்லை. சேவையைக் குறைக்கும் நோக்கில் தவிா்த்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனா்.

தற்போது தாலுகா தலைநகரான காங்கயத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனமும் பணிமனையில் உள்ளது. அது செயல்பாட்டுக்கு இன்னும் வரவில்லை. எனவே சுகாதாரத் துறைற , மாவட்ட ஆட்சியா் தலையிட்டுத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முத்தூா் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com