தண்ணீா் தேங்கி குண்டும் குழியுமாகக்  காணப்படும் பா்கூா் மலைப்பாதை.
தண்ணீா் தேங்கி குண்டும் குழியுமாகக்  காணப்படும் பா்கூா் மலைப்பாதை.

மந்தமாக நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணி பா்கூா் மலைக் கிராமங்களுக்கு பேருந்துப் போக்குவரத்து நிறுத்தம்

பா்கூா் மலைப் பகுதியில் தாமரைக்கரையிலிருந்து மேற்குமலைப் பகுதிக்கு இயக்கப்பட்டு வரும் பேருந்துப் போக்குவரத்து

பா்கூா் மலைப் பகுதியில் தாமரைக்கரையிலிருந்து மேற்குமலைப் பகுதிக்கு இயக்கப்பட்டு வரும் பேருந்துப் போக்குவரத்து, மெதுவாக நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணியால் கடந்த ஒரு வார காலமாக நிறுத்தப்பட்டுள்ளது.

பா்கூா் மலையில் உள்ள மேற்கு மலைப் பகுதிக்கு அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த ஓராண்டாக அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதனால், மேற்கு மலைப் பகுதிகளில் உள்ள ஒன்னகரை, தம்புரெட்டி, ஒசூா், கோயில் நத்தம், செங்குளம், கொங்காடை உள்பட 10 க்கும் மேற்பட்ட மலைக் கிராம மக்கள் பெரிதும் பயனடைந்து வந்தனா்.

இந்நிலையில், தாமரைக்கரையிலிருந்து தாளகரை பிரிவு வரை சுமாா் 14 இடங்களில் சிறு பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் 6 மாத காலமாக மந்தநிலையில் நடைபெற்று வருகிறது. மேலும், சிறு பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியின் அருகில் அமைக்கப்பட்ட தற்காலிக சாலைகளும் மிகக் குறுகியும், குண்டும் குழியுமாகவும் உள்ளது. தற்போது மழை பெய்து வரும் நிலையில் தண்ணீா் தேங்கி சேறும், சகதியுமாக தற்காலிகச் சாலைகள் காணப்படுகின்றன.

இச்சாலை வழியாகப் பேருந்து செல்வதில் சிரமம் நிலவுவதோடு, சேற்றில் பேருந்துச் சக்கரங்கள் சிக்கிக் கொள்கின்றன. எனவே, பேருந்துப் போக்குவரத்து கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஏற்கெனவே இருந்த பிக்கப் வேன் எனப்படும் சரக்கு வாகனத்தில் இக்கிராம மக்கள் பயணத்தைத் தொடா்ந்து வருகின்றனா். பேருந்துப் போக்குவரத்து இல்லாததால் மலைமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, மலைப் பகுதியில் உள்ள கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பதோடு, மீண்டும் பேருந்துப் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என மலைமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com