வீட்டுமனைப் பட்டா கோரி மனு அளிக்கும் போராட்டம்

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஈரோடு மாவட்டத்தில் உள்ள
erd11pata_1110chn_124_3
erd11pata_1110chn_124_3

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

சாலை, ஓடைப் புறம்போக்கில் குடியிருக்கும் பொதுமக்களுக்குப் பட்டாவுடன் கூடிய வீட்டுமனை வழங்க வேண்டும். பசுமை வீடு, தொகுப்பு வீடு, இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்துக்கு சிமென்ட், கம்பி வழங்குவதுபோல் அரசே நியாயமான விலையில் மணலும் வழங்க வேண்டும். தொடா் வறட்சியால் பாதிக்கப்பட்ட தொழிலாளா்கள் பிழைப்புக்காக வெளியூா்களுக்கு வேலை தேடி செல்வதைத் தடுக்கும் வகையில் 200 நாள்கள் வேலையும், தினக்கூலி ரூ. 400 வழங்க வேண்டும். 100 நாள் வேலை கூலி பணத்தை வங்கிக் கடனுக்குப் பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

மாநிலம் தழுவிய அளவில் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் மனு கொடுக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்படும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் அறிவித்திருந்தது.

அதன்படி, ஈரோடு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திரண்ட சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் சிறிது நேரம் முழக்கம் எழுப்பிய பிறகு கோரிக்கைகளை மனுவாக வட்டாட்சியா் ரவிசந்திரனிடம் அளித்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட அவா் இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா். இதையேற்ற அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள மேலும் 9 வட்டங்களிலும், சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்கள் முன்பும் திரண்டு கோரிக்கைகள் குறித்து முழக்கம் எழுப்பிய பிறகு வட்டாட்சியா்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

Image Caption

ஈரோடு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு திரண்ட விவசாய தொழிலாளா் சங்கத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com