நந்தா பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 14 இல் சிறப்பு வளாகத் தேர்வு

ஈரோடு நந்தா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளின் பயிற்சி, வேலைவாய்ப்புத் துறை சார்பில் ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ்

ஈரோடு நந்தா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளின் பயிற்சி, வேலைவாய்ப்புத் துறை சார்பில் ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான சிறப்பு வளாகத் தேர்வு செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 
இந்த வளாகத் தேர்வில் ஈரோடு, அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து கணினி அறிவியல், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், மின்னியல், மின்னணுவியல், தொடர்பியல் ஆகிய இளங்கலை பொறியியல் துறையில் 2018, 2019 ஆம் ஆண்டு பயின்று வெளியேறிய மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். 
இத்தகைய தகுதியுடைய மாணவர்கள்  எவ்வித கட்டணமும் இன்றி இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்த மாணவர்கள் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்குள் தனது வருகையை நந்தா பொறியியல் கல்லூரி வளாகத்தின் பயிற்சி, வேலைவாய்ப்புத் துறையில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 
வளாகத் தேர்வில் தேர்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 2.85 லட்சம் வழங்கப்படவுள்ளது. இவ்வளாகத் தேர்வில் பங்குபெற விருப்பமுள்ள மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2, இளங்கலை பட்டப் படிப்பு ஆகிய 3 தேர்வுகளிலும் 75 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களாக இருக்க வேண்டும். முதுகலை கணினி பயன்பாட்டியல் (எம்சிஏ) பட்டம் பெற்றவர்களும் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு 98425-22896, 99655-26397 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என நந்தா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளின் பயிற்சி, வேலைவாய்ப்புத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com