இரண்டாம் பருவ பாடப்புத்தகம் அக்டோபர் 3 ஆம் தேதி  விநியோகம்

ஈரோடு மாவட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகம் அக்டோபர் 3 ஆம் தேதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஈரோடு மாவட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகம் அக்டோபர் 3 ஆம் தேதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வியாழக்கிழமை (செப்டம்பர் 12) முதல் பருவத் தேர்வு துவங்குகிறது. இத்தேர்வு 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பின்னர் விடுமுறை முடிந்து அக்டோபர் 3 ஆம் தேதி இரண்டாம் பருவம் துவங்க உள்ளது. இதில் மாவட்டத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 75,000 மாணவர்கள், 6, 7, 8 ஆம் வகுப்புகளில் 51,000 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு இரண்டாம் பருவ பாடப் புத்தகம் தேவை குறித்து அரசுக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு வரும் முதல் நாளில் பாடப்புத்தகம், நோட்டுகள் வழங்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com