சாலையோரம் கொட்டப்படும் பஞ்சுக் கழிவால் பாதிப்பு

வீரப்பன்சத்திரம் பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் பஞ்சுக் கழிவுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

வீரப்பன்சத்திரம் பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் பஞ்சுக் கழிவுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஈரோடு, வீரப்பன்சத்திரம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 3,000க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. வீரப்பன்சத்திரத்திலிருந்து நாரயணவலசு செல்லும் வழியில் பாரதிதாசன் சாலையில் குடியிருப்புகளுக்குச் செல்லும் தெருக்களில் விசைத்தறி கூடங்களில் சேகரமாகும் கழிவுப் பஞ்சுகள், குப்பைக் கழிவுகலை கொண்டு வந்து கொட்டி வைத்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. 
மேலும், காற்றில் பஞ்சு பறந்து வீடுகளுக்குள் செல்கிறது. இதனால் சுவாசிக்கும்போது பஞ்சு உள்ளே சென்று விடுகிறது. மழைக்காலம் என்பதால்  மழை நீர் தேங்கி கழிவுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு பஞ்சுக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com