பள்ளிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டிகள் துவக்கம்

மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் கிரிக்கெட் மைதானத்தில் பள்ளிகளுக்கு  இடையேயான

மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் கிரிக்கெட் மைதானத்தில் பள்ளிகளுக்கு  இடையேயான ஜூனியர் சூப்பர் கிங்ஸ்  டி20 சாம்பியன் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியது.
மாநிலம் அளவிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் சாம்பியன் கோப்பைக்கான பள்ளிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில், கோவை, திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், வேலூர், நீலகிரி, திண்டுக்கல், திருநெல்வேலி, விழுப்புரம், தூத்துக்குடி, திருவண்ணாமலை, மதுரை ஆகிய 14 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றன. 
ஈரோடு மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகள் சின்னியம்பாளையம் கிரிக்கெட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. போட்டிகளை மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் ஆர்.சங்கரராமநாதன் தொடங்கி வைத்தார். மாவட்டப் பொருளாளர் அருண் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
இதில் முதலாவது ஆட்டத்தில் கோபி சாரதா மெட்ரிக். பள்ளி அணியும், ஈரோடு சி.எஸ். அகாதெமி அணியும் கலந்துகொண்டு விளையாடின. சி.எஸ். அகாதெமி அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. 
கோபி சாரதாஅணி 20 ஓவர்கள் முடிவில் 6விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. சி.எஸ். அகாதெமி அணி ரோஷன் விக்னேஷ் 3விக்கெட் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய சி.எஸ். அகாதெமி அணியினர் 17.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். இதில், சி.எஸ். அகாதெமி அணியின் பவுன்குமார் ஆட்டம் இழக்காமல் 56 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.  
இரண்டாவது ஆட்டத்தில் திண்டல் பி.வி.பி. பள்ளி அணியும், ஈரோடு கொல்லம்பாளையம் கார்மல் மெட்ரிக் பள்ளியும் மோதின.  இதில், பி.வி.பி. பள்ளி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தனர். கார்மல் பள்ளி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. இதில், விஜய்மெண்டல் ஆட்டம் இழக்காமல் 77 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய திண்டல் பி.வி.பி. பள்ளி அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. கார்மல் மெட்ரிக். பள்ளியைச் சேர்ந்த மோகனரமேஷ் 5 விக்கெட் எடுத்து வெற்றிக்கு வித்திட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றுவருகிறது. 
துவக்க விழாவில் மாவட்ட கிரிக்கெட் சங்க ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம், சென்னை சூப்பர் கிங்ஸ் ஒருங்கிணைப்பாளர்கள் எம்.கே.சிவகுமார், ஸ்ரீகுமார் நாயர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com