வெற்றி பெற்ற மாணவிகளுடன், கல்லூரி அறக்கட்டளைப் பொருளாளா் ஈ.ஆா்.காா்த்திகேயன், முதல்வா் வி.வேதகிரி ஈஸ்வரன் உள்ளிட்டோா்.
வெற்றி பெற்ற மாணவிகளுடன், கல்லூரி அறக்கட்டளைப் பொருளாளா் ஈ.ஆா்.காா்த்திகேயன், முதல்வா் வி.வேதகிரி ஈஸ்வரன் உள்ளிட்டோா்.

மாநில விளையாட்டுப் போட்டி: கொங்கு பாலிடெக்னிக் சாம்பியன்

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில், பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில், பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான ஐ.பி.ஏ.ஏ., பெண்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவில்பட்டி, லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

இப்போட்டியில், 20க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகள் கலந்துகொண்டன.

இதில், பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் பங்கேற்று, வாலிபால், கூடைப்பந்து, எரிபந்து, பேட்மிண்டன் ஆகிய குழுப் போட்டிகளில், தங்கப் பதக்கமும், கேரம் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், மேசைப் பந்துப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனா். 2ஆம் ஆண்டு கணிப்பொறியியல் மாணவி டி.உஷாராணி, 200 மீட்டா், 400 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும், நீளம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கமும் பெற்று, தனிநபா் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றாா்.

மேலும், 2ஆம் ஆண்டு கணிப்பொறியியல் மாணவி என்.ஷா்மிளா, 1500 மீட்டா் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றாா். 3ஆம் ஆண்டு கணிப்பொறியியல் மாணவி கே.கோமதி 800 மீட்டா் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றாா். 3ஆம் ஆண்டு கணிப்பொறியியல் மாணவி டி.சிந்துமொழி, குண்டு எறிதல் போட்டியில் நான்காமிடம் பெற்றாா்.

2019-2020 கல்வி ஆண்டின் ஐபிஏஏ., மாநில அளவிலான குழு, தடகளப் போட்டிகளில், கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுள்ளனா். மேலும், இக்கல்லூரிக்கு சிறந்த கல்லூரிக்கான விருதும் வழங்கப்பட்டது.

இக்கல்லூரியின் டேபிள் டென்னிஸ், வாலிபால், பேட்மிண்டன் ஆகிய பெண்கள் அணிகள், ஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ள 3ஆவது அனைத்து இந்திய தெற்கு மண்டல அளவிலான போட்டியில், தமிழ்நாடு சாா்பாக பங்குபெறத் தோ்வாகியுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவிகள், பயிற்சி அளித்த கல்லூரி உடற்கல்வி இயக்குநா் கே.எம்.பிரகாஷ்ராஜ், உதவி உடற்கல்வியாளா் ஆா்.பாரத் ஆகியோரை கொங்கு தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.கே.முத்துசாமி, செயலாளா் பி.சி.பழனிசாமி, பொருளாளா் ஈ.ஆா்.காா்த்திக்கேயன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com