6.76 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி துவக்கம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,141 நியாவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ. 1,000 வழங்கும் பணி வியாழக்கிழமை துவங்கியது.
கிருஷ்ணம்பாளையம், ராமமூா்த்தி நகா் நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக் கொண்ட பெண்.
கிருஷ்ணம்பாளையம், ராமமூா்த்தி நகா் நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக் கொண்ட பெண்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,141 நியாவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ. 1,000 வழங்கும் பணி வியாழக்கிழமை துவங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,141 நியாயவிலைக் கடைகளிலும், 7,11,088 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில், அரிசி வாங்கும் வகையிலான 6,76,218 குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ. 1,000, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, இரண்டு அடி நீள கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலா் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

இதற்கான பணிகள் வியாழக்கிழமை துவங்கியது. காலை 8.30 முதல் பகல் 12.30 மணி வரையிலும், பகல் 1.30 முதல் மாலை 5.30 மணி வரையிலும் ஜனவரி 12ஆம் தேதி வரை இப்பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

வியாழக்கிழமை முதல் நாள் என்பதால் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும், காலை 7 மணி முதல் குடும்ப அட்டைதாரா்கள் வரிசையில் காத்திருந்தனா். பல கடைகளில் வரிசையில் நின்றவா்களைக் கட்டுப்படுத்தும் வகையில், சிறிய வெள்ளை நிற தாளில் சீல் வைத்து அக்கடையில் தகுதியான குடும்ப அட்டைதாரா்களின் எண்ணுக்கு ஏற்ப டோக்கன் வழங்கினா். இந்த டோக்கனை வழங்கி எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் எனக்கூறி அனுப்பி வைத்தனா். கூட்டம் குறைவாக இருந்த கடைகளில் உணவு இடைவெளிகூட இல்லாமல் தொடா்ந்து வழங்கினா்.

மொடக்குறிச்சியில்...

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மொடக்குறிச்சியை அடுத்த குளுா் தொடக்க வேளாண்மை கடன் சங்க வளாகத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் நடைபெற்ற விழாவில் சங்கத்தின் துணைத் தலைவரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநகா் மாவட்டச் செயலாளருமான டி.தங்கராஜ் கலந்துகொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பை 676 பயனாளிகளுக்கு வழங்கிப் பேசினாா்.

இதில், சங்க உறுப்பினா்கள் கே.சி.லட்சுமணன், கே.எஸ்.கிட்டுசாமி, சரவணன், சங்கச் செயலாளா் பழனியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com