வன பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கரடி 

அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் வனசரகத்திற்கு உட்பட வன பகுதியில் 15வயது மதிக்கத்தக்க பெண் கரடி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வன பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கரடி 

அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் வனசரகத்திற்கு உட்பட வன பகுதியில் 15வயது மதிக்கத்தக்க பெண் கரடி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் வனசரகத்திற்கு உட்பட வன பகுதியில் ஏராளமான யானை, கரடி, புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் பர்கூர் வனசரகத்திற்கு உட்பட வன பகுதியில் வன காவலர்கள் வன விலங்குகளை பாதுகாப்பதற்காக ரோந்து மேற்கொள்வது வழக்கம். 

இந்நிலையில் தாமரைக்கரை வன பகுதியில் வன காவலர்கள் ரோந்து மேற்கொண்ட போது வன பகுதியில் கரடி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதையடுத்து வன அலுவலர் மற்றும் வனகால்நடை மருத்துவ குழுவினர் கரடியை உடற்கூறாய்வு செய்தனர். அதில் 15 வயது மதிக்கத்தக்க பெண் கரடி என்பதும் சரியாக உணவு உட்கொள்ளாமல் நோய்வாய்ப்பட்டு இறந்திறக்கிறது என்று தெரிவித்தனர். 

மேலும் உடற்கூறாய்வு செய்த கரடியின் உடலை வன பகுதியில் உள்ள மற்ற வனவிலங்குகளுக்கு உணவாக விட்டு சென்றனர். தொடர்ந்து வனவிலங்குகள் உயிரிழந்து வருவதை வனத்துறையினர் தடுக்க வேண்டும் என்று வன உயிரின பாதுகாப்பு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com