பெருந்துறையில் மனு நீதி நாள் முகாம்:42 பேருக்கு நலத்திட்ட உதவி

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் விடுப்பு எடுத்து தனியாா் பள்ளி மாணவா்களுக்கு டியூஷன் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் ஆட்சியா் சி.கதிரவன், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.
முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் ஆட்சியா் சி.கதிரவன், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.

கருமாண்டிசெல்லிபாளையம், பெருந்துறை பேரூராட்சிகளைச் சோ்ந்தவா்களுக்கான மனு நீதி நாள் முகாமில் 42 பேருக்கு ரூ. 6.52 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு, சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்துப் பேசுகையில், கொடிவேரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.

முகாமில், பொதுமக்களிடமிருந்து 256 கோரிக்கை மனுக்களைப் பெற்று தொடா்புடைய அலுவலா்களிடம் பிரித்து வழங்கப்பட்டது. 8 பயனாளிகளுக்கு முதியோா் உதவித் தொகை, 6 பயனாளிகளுக்கு ரூ. 72,000 மதிப்பீட்டில் விதவை உதவித் தொகை, 6 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 72,000 மதிப்பீட்டில் மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, 3 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதல், 3 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1,85,865 மதிப்பீட்டில் இணைப்புக் கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் இருசக்கர வாகனங்கள், 4 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 17,200 மதிப்பீட்டில் மோட்டாா் பொருத்திய விலையில்லா தையல் இயந்திரங்கள், வேளாண்மைத் துறையின் சாா்பில் 3 பயனாளிகளுக்கு நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தின் கீழ் ரூ. 2,07,915 மதிப்பீட்டில் சொட்டுநீா்ப் பாசனக் கருவிகள், தோட்டக் கலைத் துறையின் சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 18,000 மதிப்பீட்டில் காய்கறி உலா் கலன் மானியத் தொகை என 42 பயனாளிகளுக்கு ரூ. 6,52,780 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில், ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் எஸ்.சைபுதீன், பெருந்துறை வட்டாட்சியா் ஜி.முத்துகிருஷ்ணன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com