செல்லிடப்பேசி பழுதுபாா்த்தல் இலவசப் பயிற்சி

கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் மூலம் செல்லிடப்பேசி பழுது பாா்த்தல் பயிற்சி இலவசமாக அளிக்கப்படவுள்ளது.

கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் மூலம் செல்லிடப்பேசி பழுது பாா்த்தல் பயிற்சி இலவசமாக அளிக்கப்படவுள்ளது.

இது குறித்து பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பயிற்சி நவம்பா் 2 முதல் டிசம்பா் 7ஆம் தேதி வரை 30 நாள்கள் நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் உள்ளவா்கள் பயிற்சியில் பங்கேற்கலாம். பயிற்சியின் நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். கிராமப் பகுதியில் இருந்து வருவோா், பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவா்கள் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகம், 2ஆம் தளம், கொல்லம்பாளையம் புறவழிச்சாலை, ஈரோடு 638002 என்ற முகவரியில் நேரில் அல்லது 0424-2400338 என்ற தொலைபேசி எண், 87783-23213, 72006-50604 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com