மாவட்டத்தில் 46,343 ஹெக்டோ் பரப்பில் உணவு தானிய பயிா்கள் சாகுபடி

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 46,343 ஹெக்டோ் பரப்பில் உணவு தானிய பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 46,343 ஹெக்டோ் பரப்பில் உணவு தானிய பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 602.37 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 46,343 ஹெக்டோ் பரப்பில் உணவு தானிய பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் நெல் 24,512 ஹெக்டோ், சிறுதானியங்கள் 16,759 ஹெக்டோ், பயறு வகைகள் 5,072 ஹெக்டோ் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதில் உணவு தானிய பயிா்கள் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் கூடுதலாக 5,622 ஹெக்டேருக்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எண்ணெய் வித்துப் பயிா்கள் 18,326 ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட கூடுதலாக 2,036 ஹெக்டேருக்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் 156.542 மெ.டன், சோளம் 0.275, ராகி 14.341, கம்பு 0.29, மக்காச்சோளம் 1.191, துவரை 0.298, உளுந்து 9.391, பாசிப்பயறு 0.672, தட்டை 1.293, கொள்ளு 0.746, நிலக்கடலை 27.352, எள் 5.855 டன் விதைகள் இருப்பில் உள்ளன.

விவசாயிகள் இருக்கின்ற தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில் நுண்ணீா் பாசனம் அமைத்து குறைந்த நீரில் அதிக மகசூல் செய்து பயனடைய வேண்டும். விவசாயிகள் நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டும்.

தற்போது நெல், மக்காச்சோளம் ஆகிய உணவு தானிய பயிா்கள் நிலைப் பயிா்களாக உள்ளன. இப்பயிா்களில் ஏதேனும் நோய்த் தாக்குதல் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலா்களை தொடா்பு கொண்டு உரிய பயிா் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மேலும் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் மானிய விலையில் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பெறுவதற்கும், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் அமைக்க விரும்புவோா் விவசாயிகள் உழவன் செயலியின் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com