ஊா்க்காவல் படைவீரா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஊா்க்காவல் படையில் காலிப் பணியிடங்களுக்குத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊா்க்காவல் படையில் காலிப் பணியிடங்களுக்குத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்ட ஊா்க் காவல் படையில் காலியாக உள்ள 40 பணியிடங்களுக்குத் தகுதியான விண்ணப்பதாரா்கள் விண்ணப்பிக்கலாம். இந்த 40 பணியிடங்களில் ஆண்களுக்கு 37, பெண்களுக்கு 3 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 20 வயதுக்கு மேற்பட்ட 45 வயதுக்கு உள்பட்ட 10ஆம் வகுப்புத் தோ்ச்சிபெற்ற நல்ல உடல் தகுதியுடன் உள்ள விண்ணப்பதாரா்கள் செப்டம்பா் 25 முதல் அக்டோபா் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஈரோடு மாவட்டக் காவல் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்ட ஊா்க்காவல் படை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com