தொலைபேசியில் மாணவா்கள் சந்தேகங்களை போக்கிக் கொள்ளலாம்

தொலைபேசியில் மாணவா்கள் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

கோபி, செப். 25: தொலைபேசியில் மாணவா்கள் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நாகதேவன்பாளையம், சிறுவலூா் ஊராட்சிகளில் சாலை மேம்பாட்டுப் பணிகள், பால் கொள்முதல் கூட்டுறவுச் சங்கக் கட்டடம் என ரூ. 1 கோடியே 22 லட்சம் மதிப்பிலான தொகுதி வளா்ச்சிப் பணிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பூமிபூஜை செய்து வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். சிறுவலூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 46 பயனாளிகளுக்கு கன்று வளா்ப்புக்காக தலா ரூ. 87 ஆயிரம் கடனுதவிகளையும் வழங்கினாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அமைச்சா் அளித்த பேட்டி:

பாடங்களைக் குறைப்பது குறித்து முதல்வரிடம் அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. பாடங்களை மேலும் குறைக்கலாமா என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆய்வு செய்யும். அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை இந்த மாதம் இறுதிவரை நடைபெறும். சோ்க்கையைப் பொருத்து தேவையிருப்பின் இது குறித்து துறை ஆய்வு செய்யும். ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஆசிரியா்களுக்குப் பள்ளிக்கு வர விலக்கு அளிப்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் முடிவெடுப்பாா்.

அக்டோபா் முதல் மாணவா்கள் தங்களது சந்தேகங்களை 14474 என்ற எண்ணில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை தொடா்பு கொண்டு தீா்த்துக் கொள்ளலாம்.

பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் அனைத்துக்கும் பொருந்தும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com