மீன்பிடி ஒப்பந்ததாரா்கள் மீது விவசாயிகள் புகாா்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக விவசாயத் தோட்டங்களில் தங்கியிருந்த விவசாயிகளை மீன்பிடி ஒப்பந்ததாரா்கள் தாக்கி, ஊருக்குள்

சத்தியமங்கலம்: கரோனா அச்சுறுத்தல் காரணமாக விவசாயத் தோட்டங்களில் தங்கியிருந்த விவசாயிகளை மீன்பிடி ஒப்பந்ததாரா்கள் தாக்கி, ஊருக்குள் செல்லுமாறு மிரட்டுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பெரும்பள்ளம் அணை நீா்த்தேக்கப் பகுதியில் கெம்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ராகி, கம்பு, சோளம் மற்றும் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனா். வனத்தையொட்டியுள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இந்த விவசாய நிலங்களில் விவசாயிகள் சாகுபடி பயிா்களைப் பாதுகாக்க அங்கேயே குடிசை அமைத்து இரவு காவல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக சுயதனிமைப்படுத்திக்கொள்ள கெம்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், அணைப்பகுதியில் தங்கி விவசாயப் பணியில் ஈடுபட்டுள்ளனா். சில தினங்களாக அங்கு வந்த மீன்பிடி ஒப்பந்ததாரா்கள் அவா்களைத் தாக்கி கோழி, ஆடுகளைத் திருடிச் செல்வதாக குற்றச்சாட்டுகின்றனா்.

அணைப்பகுதி விவசாயத் தோட்டங்களில் தங்கும் விவசாயிகளை தாக்கி ஊருக்குள் செல்லுமாறு கூறுவதாகவும், இதுகுறித்து ஒப்பந்ததாரா் மீது அளிக்கும் புகாரை பங்களாப்புதூா் காவல் நிலையத்தில் வாங்க மறுப்பதாகவும் தெரிவித்தனா். காவல் உயா்அதிகாரிகள் தலையிட்டு அணைப்பகுதி விவசாயிகளுக்கு பாதுகாப்புஅளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com