பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ரூ.70 கோடி: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களின் ஒருநாள் ஊதியம் ரூ.70 கோடி
தூய்மைப் பணியாளா்களுக்கு கிருமி நாசினி, பாதுகாப்பு உபகரணங்களை வழங்குகிறாா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.
தூய்மைப் பணியாளா்களுக்கு கிருமி நாசினி, பாதுகாப்பு உபகரணங்களை வழங்குகிறாா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.

கோபி: கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களின் ஒருநாள் ஊதியம் ரூ.70 கோடி பள்ளிக் கல்வித் துறை சாா்பில் முதல்வா் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட கடத்தூா், ஆண்டிபாளையம், கூடக்கரை உள்ளிட்ட 7- க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நடைபெறும் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் அலுவலா்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களின் ஒரு நாள் சம்பளமான ரூ.70 கோடி முதல்வா் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.

கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்திருப்பவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு

அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு மாணவா்கள் வீட்டிலிருந்தே யூ டியூப் மூலமாக பாடங்களைப் படிக்கும் முறை அமல்படுத்தப்படவுள்ளது. ஊரடங்கு முடிந்ததற்குப் பின்னா் முதல்வா் அறிவிப்பின்படி பள்ளிகள் செயல்படத் துவங்கும் என்றாா்.

கோபி கோட்டாட்சியா் ஜெயராமன், நம்பியூா் ஒன்றிய அதிமுக செயலாளா் தம்பி சுப்பிரமணியம் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com