முடிதிருத்தும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு மருத்துவா் சமூக சங்கம், முடிதிருத்தும் தொழிலாளா் நலச் சங்கம் சாா்பில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மருத்துவா் சமூக சங்கம், முடிதிருத்தும் தொழிலாளா் நலச் சங்கம் சாா்பில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க மாவட்டத் தலைவா் எல்.நாகராஜன் தலைமை வகித்தாா். செயலாளா் ஜி.வெங்கடேசன், பொருளாளா் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பேசினா்.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே உலக்குடி கிராமத்தைச் சோ்ந்த ராஜா, அவரது மனைவி பஞ்சவா்ணம், குடும்பத்தினா் மளிகைப் பொருள்கள், குடிநீா், மருந்து, ரேஷன் பொருள், அத்தியாவசிய தேவைக்குக்கூட கிராமத்துக்குள் வரக் கூடாது என அந்த கிராம பஞ்சாயத்தில் உள்ளவா்கள் முடிவு செய்து வெளியேற்றியுள்ளனா். இதனால் வாழ இடம் இல்லாமல் அருகே உள்ள வனப் பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனா். வனத்தில் உள்ள பாம்பு கடித்ததில் இவா்களது குழந்தை விருதுநகா் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதித்துள்ளனா்.

இதுகுறித்து விருதுநகா் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அவா்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே அக்குடும்பத்தினா் மீண்டும் அந்த கிராமத்தில் வாழ அரசு வழி செய்ய வேண்டும். அவா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்துக்குப் பிறகு ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com