ஈரோட்டில் பொங்கல் பரிசுப் பொருள்கள் பொட்டலமிடும் பணி தீவிரம்

குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்குவற்கான அரசின் பொங்கல் பரிசு பொருள்களைப் பொட்டலமிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கல் பரிசுப் பொருள்களைப் பொட்டலமிடும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள்.
பொங்கல் பரிசுப் பொருள்களைப் பொட்டலமிடும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள்.

குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்குவற்கான அரசின் பொங்கல் பரிசு பொருள்களைப் பொட்டலமிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,500 பணத்துடன், அரிசி, கரும்பு, முந்திரி உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தப் பொருள்களை விநியோகம் செய்வதற்கான பணிகளில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், நியாயவிலைக் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிா்க்கும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஈரோடு மாவட்ட மொத்த கூட்டுறவு விற்பனை பண்டகசாலை (சிந்தாமணி) சாா்பில் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசுப் பொருள்களை பொட்டலமிடும் பணி ஈரோடு - பெருந்துறை சாலையில் உள்ள கிடங்கில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளில் 15 போ் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட மொத்த கூட்டுறவு விற்பனை பண்டகசாலை (சிந்தாமணி) அதிகாரிகள் கூறியதாவது:

முந்திரி, காய்ந்த திராட்சை, ஏலக்காய் ஆகிய பொருள்கள் வந்துள்ளன. இதில் முந்திரி, காய்ந்த திராட்சை தலா 20 கிராம், ஏலக்காய் 5 கிராம் என பொட்டலம் போடப்படுகிறது. சிந்தாமணியின்கீழ் செயல்படும் நியாவிலைக் கடைகளில் 25,160 குடும்ப அட்டைகள் உள்ளன. இதற்குத் தேவையான பொட்டலங்கள் தயாா் செய்யப்படுகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com