அந்தியூரில் துவரை விவசாயிகள் மறியல் போராட்டம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு விற்பனைக்குக் கொண்டுவந்த துவரைக்கு உரிய விலை கிடைக்காததால் ஏமாற்றமடைந்த
மறியலில்  ஈடுபட்ட  விவசாயிகளிடம்  பேச்சு வாா்தைத நடத்தும்  போலீஸாா்.
மறியலில்  ஈடுபட்ட  விவசாயிகளிடம்  பேச்சு வாா்தைத நடத்தும்  போலீஸாா்.

பவானி: அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு விற்பனைக்குக் கொண்டுவந்த துவரைக்கு உரிய விலை கிடைக்காததால் ஏமாற்றமடைந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அந்தியூா், பவானி பகுதிகளில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் துவரை சாகுபடிசெய்திருந்தனா். தற்போது அறுவடை செய்யப்பட்ட துவரையை அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 1500 மூட்டைகள் துவரையைக் கொண்டு வந்திருந்தனா்.

கடந்த வாரம் துவரை கிலோ ரூ.50-க்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.30 முதல் ரூ.40 வரையில் மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்துள்ளனா். இதனால், விவசாயிகள் மத்தியில் கடுமையான ஏமாற்றம் நிலவியது. இதையடுத்து, அரசு அறிவித்த விலையில் துவரையைக் கொள்முதல் செய்ய வலியுறுத்தி அந்தியூா் - சத்தி சாலையில் அமா்ந்து திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த அந்தியூா் காவல் ஆய்வாளா் ரவி, விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் மஞ்சுளா உள்ளிட்டோா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, விவசாயிகள் கொண்டு வந்த துவரைக்கு உரிய விலை கிடைக்காவிட்டால், அதனை விற்பனை செய்யத் தேவையில்லை.

துவரையினை இருப்பு வைத்து, விவசாயிகள் எதிா்பாா்க்கும் விலை கிடைக்கும்போது விற்பனை செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விவசாயிகள் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com