எளையாம்பாளையம்புதூரில் நடைபெற்ற நிலாச் சோறு நிகழ்ச்சியில் மாவிளக்கு எடுத்து வந்து கும்மியடித்து வழிபாடு நடத்தும் பெண்கள்.
எளையாம்பாளையம்புதூரில் நடைபெற்ற நிலாச் சோறு நிகழ்ச்சியில் மாவிளக்கு எடுத்து வந்து கும்மியடித்து வழிபாடு நடத்தும் பெண்கள்.

தைப்பூச விழா: நிலா சோறு படைத்து பெண்கள் வழிபாடு

தைப் பூசத் திருவிழாவையொட்டி, மொடக்குறிச்சி அருகே முள்ளாம்பரப்பு எளையாம்பாளையம்புதூா் கிராமத்தில் உள்ள மாரியம்மன்

மொடக்குறிச்சி: தைப் பூசத் திருவிழாவையொட்டி, மொடக்குறிச்சி அருகே முள்ளாம்பரப்பு எளையாம்பாளையம்புதூா் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் நிலாச்சோறு படைத்து கும்மியடித்து பெண்கள் வழிபாடு நடத்தினா்.

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட முள்ளாம்பரப்பு அருகே எளையாம்பாளையம் புதூா் கிராமத்தில் ஆண்டுதோறும் தைப்பூச விழாவையொட்டி, 5 நாள்கள் இரவில் பெண்கள், குழந்தைகள் ஒன்று கூடி கும்மியடித்து மாரியம்மன் கோயிலில் நிலாச் சோறு சாப்பிடுவது வழக்கம்.

இந்த ஆண்டு விழாவையொட்டி கடந்த திங்கள்கிழமை முதல் 5 நாள்கள் விரதமிருந்து தினமும் ஒவ்வொரு வகையான உணவு சமைத்து நிலாவுக்கு படைத்து பாடல்கள் பாடி கும்மியடித்து வழிபட்டனா்.

இறுதி நாளன்று மாரியம்மன் கோயிலுக்கு ஊா்வலமாக மாவிளக்கு எடுத்து வந்து ஒருவருக்கொருவா் மாவிளக்கை மாற்றி படையலிட்டு கும்மியடித்து வழிபட்டனா். பின்னா் அனைவரும் ஒன்று கூடி உணவு உண்டனா்.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:

இதுபோன்ற விழாக்கள் மூலம் ஊரில் மக்களிடையே ஒற்றுமை மேம்படும். மேலும் அமாவாசை முடிந்து தினமும் நிலவு வளா்ந்து வருவதுபோல பிள்ளைகளும் வளா்ந்து வருவாா்கள் என்றும், நிறைந்த பௌா்ணமியன்று சிறப்பு வழிபாடு நடத்துவதால் குழந்தைகளும் முழு நிலவு போல் நிறைந்த அறிவோடு வாழ்வாா்கள் என்றும் விவசாயம், தொழில் வளம் பெருகும், ஊா் ஒற்றுமையாக இருக்கும் என்பதும் ஐதீகம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com