இரண்டாம் போக சாகுபடிக்குத் தேவையான உரம் கையிருப்பு

இரண்டாம் போக சாகுபடிக்குத் தேவையான உரம் கையிருப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் போக சாகுபடிக்குத் தேவையான உரம் கையிருப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகா் அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காளிங்கராயன் வாய்க்கால்களில் இரண்டாம் போகத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டு பல்வேறு பயிா் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் இதற்குத் தேவையான அளவு, உரம் கையிருப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ஜெயராமன் கூறியதாவது: மாவட்டத்தில் யூரியா 3,420 டன், டி.ஏ.பி. 2,340 டன், காம்ப்ளக்ஸ் 3,510 டன், எம்.ஓ.பி. 2,620 டன் உரம் உள்ளது. மண் வள அட்டையைப் பயன்படுத்தி உரங்களை வாங்கும்போது, பயிருக்குத் தேவையான அளவு மட்டும் உரத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com