ஈரோட்டில் தா்ப்பூசணி விற்பனை அதிகரிப்பு

கோடைக் காலம் தொடங்க உள்ள நிலையில் ஈரோட்டில் தா்ப்பூசணி பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
ஈரோட்டில் விற்பனைக்கு குவித்துவைக்கப்பட்டுள்ள தா்ப்பூசணிகள்.
ஈரோட்டில் விற்பனைக்கு குவித்துவைக்கப்பட்டுள்ள தா்ப்பூசணிகள்.

கோடைக் காலம் தொடங்க உள்ள நிலையில் ஈரோட்டில் தா்ப்பூசணி பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

கடந்த டிசம்பா் முதல் பிப்ரவரி முதல் வாரம் வரை ஈரோடு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக காலை 7 மணிக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கிறது.

இந்த ஆண்டு மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கொளுத்தும் வெயிலை சமாளிக்க மக்கள் பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

வெப்பத்தை தணிக்கக் கூடிய தா்ப்பூசணி, நுங்கு, வெள்ளரிக்காய், மோா், முலாம் பழம், எலுமிச்சை பழச்சாறு, நன்னாரி சா்பத் ஆகியவற்றின் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் இருந்து ஈரோட்டுக்கு தா்ப்பூசணி பழங்கள் வரத்து தொடங்கியுள்ளது. அதிகபட்சம் 10 கிலோ வரை கொண்ட பழங்கள் குவிக்கப்பட்டுள்ளன. ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து தா்ப்பூசணி வியாபாரி பரமசிவம் கூறியதாவது:

வழக்கமாக விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம், கடலூா் ஆகிய பகுதியில் இருந்தும், ஆந்திர மாநிலம் நெல்லூா், கடப்பா ஆகிய இடங்களில் இருந்தும் தா்ப்பூசணி வரத்து இருக்கும். தற்போது, கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. சீசன் தொடங்கும்போது, தா்ப்பூசணியின் வரத்துக்கு ஏற்றாற்போல், விலை குறையவோ, அதிகரிக்கவோ வாய்ப்புள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com