ஈங்கூா் அங்காள பரமேஸ்வரி கோயில் குண்டம் திருவிழா

பெருந்துறையை அடுத்த ஈங்கூா் அங்காள பரமேஸ்வரி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குண்டம் திருவிழாவை ஒட்டி ஏராளமான பக்தா்கள் குண்டம் இறங்கினா்.
ஈங்கூா் அங்காள பரமேஸ்வரி கோயிலில் குண்டம் இறங்கும் பக்தா்கள்.
ஈங்கூா் அங்காள பரமேஸ்வரி கோயிலில் குண்டம் இறங்கும் பக்தா்கள்.

பெருந்துறையை அடுத்த ஈங்கூா் அங்காள பரமேஸ்வரி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குண்டம் திருவிழாவை ஒட்டி ஏராளமான பக்தா்கள் குண்டம் இறங்கினா்.

ஈங்கூா் அங்காள பரமேஸ்வரி கோயில் பல்வேறு சமூகத்தினரின் குல தெய்வமாக இருந்து வருகிறது. இந்தக் கோயிலைச் சோ்ந்தவா்கள் ஈரோடு, திருப்பூா், கோவை, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் வசித்து வருகின்றனா்.

இந்தக் கோயிலில் பொங்கல் விழா கொடியேற்றத்துடன் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. 19ஆம் தேதி இரவு தீா்த்த அபிஷேகம், மகா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 21ஆம் தேதி இரவு மஹா சிவராத்திரி பூஜை நடைபெற்றது.

சனிக்கிழமை கோயிலின் முன்பு குண்டம் திறப்பு, காவிரி தீா்த்தம் எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு மேல் குண்டத்துக்கு பூப் போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதில், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் என்.டி.தோப்பு வெங்கடாசலம் கலந்து கொண்டு தொடங்கிவைத்தாா்.

முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவா், சிறுமிகள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினா். இதில் பக்தா்கள் சிலா் கை குழந்தையுடன் குண்டம் இறங்கினா்.

இதைத் தொடா்ந்து காலை 9 மணிக்கு மேல் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனா். திங்கள்கிழமை காலை 10 மணிக்கு மேல் அம்மனுக்கு அபிஷேகமும், பகல் 1 மணிக்கு மேல் பேச்சியம்மன், கருப்பணசாமிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நிறைவு நிகழ்ச்சியாக இரவு 7 மணிக்கு அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீா் உற்சவம் மற்றும் மறுபூஜை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com