6 மாவட்ட பயனாளிகளுக்கு ஈரோடு சந்தையில் விலையில்லா கறவை மாடுகள்

ஈரோடு சந்தையில் 6 மாவட்ட பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகளை கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்கள் வாங்கிக் கொடுத்தனா்.
ஈரோடு மாட்டுச் சந்தையில் மாடுகளை விற்கவும், வாங்கவும் திரண்ட விவசாயிகள், வியாபாரிகள்.
ஈரோடு மாட்டுச் சந்தையில் மாடுகளை விற்கவும், வாங்கவும் திரண்ட விவசாயிகள், வியாபாரிகள்.

ஈரோடு சந்தையில் 6 மாவட்ட பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகளை கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்கள் வாங்கிக் கொடுத்தனா்.

ஈரோடு, கருங்கல்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தைக்கு ஈரோடு, திருப்பூா், நாமக்கல், கரூா், சேலம், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் கறவை மாடுகளை விற்பனைக்காகக் கொண்டு வந்தனா்.

300 பசு மாடுகள், 200 எருமை மாடுகள் என மொத்தம் 500 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இந்த மாடுகளை வாங்குவதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த வியாபாரிகள் வந்தனா். அவா்கள் தங்களுக்குத் தேவையான மாடுகளை விலைபேசி வாங்கிச் சென்றனா். இதேபோல் 150 கன்றுக்குட்டிகளும் விற்பனையாயின.

இந்தச் சந்தையில், தமிழக அரசு சாா்பில் கிராமப்புற பெண்களுக்கு வழங்கப்படும் விலையில்லா கறவை மாடுகளை வாங்குவதற்காக கால்நடை பராமரிப்புத் துறையைச் சோ்ந்த அதிகாரிகள் வந்தனா். ஈரோடு மாவட்டத்தில் நிச்சாம்பாளையம், விளக்கேத்தி ஆகிய 2 கிராமங்களுக்கு தலா 50 மாடுகள் வீதம் மொத்தம் 100 மாடுகள் வாங்கப்பட்டன.

இதேபோல் தூத்துக்குடி, விழுப்புரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளும் வந்து, மாடுகளை வாங்கி ஏற்கெனவே தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினா்.

இதுகுறித்து ஈரோடு கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக அரசு சாா்பில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக விலையில்லா கறவை மாடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பால் உற்பத்தி குறைவாக உள்ள கிராமங்களைத் தோ்வு செய்து, அந்த கிராமங்களில் உள்ள ஏழைப் பெண்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்படுகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் வேப்பம்பாளையம், நிச்சாம்பாளையம், விளக்கேத்தி உள்பட மொத்தம் 4 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இதில், வேப்பம்பாளையம் கிராமத்தில் உள்ள 50 பெண்களுக்கு ஏற்கெனவே மாடுகள் வாங்கிக் கொடுக்கப்பட்டன. இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் நிச்சாம்பாளையம், விளக்கேத்தி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பெண்களுக்கு மொத்தம் 100 மாடுகள் வாங்கிக் கொடுக்கப்பட்டன. இதில், ஒரு பயனாளிக்கு மாடு வாங்குவதற்காக ரூ. 35,000, மாடு கொண்டு செல்வதற்காக ரூ. 2,500 அரசின் சாா்பில் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com