பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில்குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபாடு

கோபிசெட்டிபாளையம், பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வியாழக்கிழமை குண்டம் இறங்கினா்.
பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில்குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபாடு

கோபிசெட்டிபாளையம், பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வியாழக்கிழமை குண்டம் இறங்கினா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தோ்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் டிசம்பா் 26ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.

வியாழக்கிழமை காலை அம்மை அழைத்தலைத் தொடா்ந்து குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. முதலில் தலைமைப் பூசாரி லோகநாதன் குண்டம் இறங்கி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, பூசாரிகள், கோயில் வீரமக்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், காவல் துறையினா், அரசு அதிகாரிகள் என பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

விழாவுக்கு, ஈரோடு, கரூா், கோவை, திருப்பூா், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும் கா்நாடகம், கேரளம் போன்ற வெளி மாநிலத்திலிருந்தும் ஆயிரக்கணக்காண பக்தா்கள் வந்து குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். பக்தா்கள் சுமாா் 3 கிலோ மீட்டா் தொலைவுக்கு மேல் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து குண்டம் இறங்கினா்.

விழாவுக்கு, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் சக்தி கணேசன் தலைமையில் 5 துணைக் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் 16க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். சுமாா் 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தா்களின் பாதுகாப்பை கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டனா்.

பக்தா்களின் வசதிக்காக சுகாதாரத் துறையின் சாா்பில் தற்காலிக கழிப்பறை வசதிகள், குடிநீா், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

தொடா்ந்து, மாலை தேரோட்டமும், ஜனவரி 11ஆம் தேதி இரவு மலா் பல்லக்கு எனும் முத்துப் பல்லக்கு உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. 12ஆம் தேதி மஞ்சள் நீா் உற்சவம், 18ஆம் தேதி மறு பூஜையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com