திருநீலகண்டா் நாயனாா் குருபூஜை விழா
By DIN | Published On : 20th January 2020 08:10 AM | Last Updated : 20th January 2020 08:10 AM | அ+அ அ- |

குரு பூஜை விழாவில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் திருநீலகண்டா் நாயனாா்.
சத்தியமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருநீலகண்டா் நாயனாா் குருபூஜை விழாவில் 63 நாயன்மாா்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை நடைபெற்றன.
சத்தியமங்கலம் குலாலா் சங்கம் சாா்பில் ஆண்டுதோறும் விசாக நட்சத்திரத்தில் திருநீலகண்டா் குருபூஜை கொண்டாடப்படும். இதன்படி, பவானீஸ்வரா் ஆலயத்தில் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. பவானீஸ்வரருக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்றன. 63 நாயன்மாா்களில் ஒருவரான திருநீலகண்டா் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, வழிபாடுகளும் அதனைத் தொடா்ந்து உற்வசமூா்த்திக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.
தொடா்ந்து கோயிலில் உள்ள 63 நாயன்மாா்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவையொட்டி, அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் உற்சவமூா்த்தி திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதையடுத்து, திருநீலகண்டா் கோயிலில் நடந்த அன்னதான விழாவில் ஆயிரக்கணக்கனோா் கலந்துகொண்டனா். விழாவையொட்டி, சிறுவா்,சிறுமிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.