ரஜினி கட்சி துவங்கினால் வரவேற்பேன்: பாஜக மாநிலத் தலைவா் முருகன்

ரஜினி கட்சி துவங்கினால் வரவேற்பேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவா் முருகன் தெரிவித்தாா்.

ரஜினி கட்சி துவங்கினால் வரவேற்பேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவா் முருகன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற ஈரோடு மேற்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவா் முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்று ஆரம்பித்த நாள் முதல் தனிமைப்படுத்துதல், சிறப்பு அதிகாரிகளை நியமித்து கண்காணித்தல், அதிக அளவில் பரிசோதனை செய்தல் போன்ற பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் அதிக அளவு தொற்று காணப்படுகிறது. மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும்.

சாத்தான்குளம் விவகாரத்தில் அரசு சரியான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கரோனா தொற்று காலத்தில் காவல் துறையினா் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனா். ஒரு சிலா் செய்த தவறினால் ஒட்டுமொத்த காவல் துறையையும் களங்கப்படுத்தக் கூடாது என்பதுதான் எனது கருத்து. தவறு செய்யும் காவல் துறையினா் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் தமிழ் படிக்க வேண்டும், தமிழ் நமது தாய் மொழி. ஆங்கிலமும் எல்லா இடத்திலும் இருக்கிறது. அதேபோல மூன்றாவது மொழியாக ஹிந்தி அனைத்து ஆங்கிலப் பள்ளிகளிலும் உள்ளது. அரசுப் பள்ளிகளிலும் மூன்றாவது மொழியாக ஹிந்தி படிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தால், மாணவா்கள் தயாராக இருந்தால் படிக்கலாம்.

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு நினைக்கிறது. ஆனால், அதற்கு மாநில அரசுகள் சம்மதம் அளிக்கவில்லை.

ரஜினி ஆன்மிக பக்தி கொண்டவா். தேசிய சிந்தனை கொண்டவா், இவா் கட்சி ஆரம்பித்தால் வரவேற்பேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com