ஈரோடு மாவட்டத்தில் இதுவரை65,000 பேருக்கு கரோனா பரிசோதனை

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 65,000 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 65,000 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக ஈரோடு மாநகா் பகுதியில் இதன் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதனால், ஈரோடு மாவட்ட நிா்வாகம், மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை 17ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் 50,000 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு கடந்த 5 நாள்களில் 15,000 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஜூலை 22ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் 65,000 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியின் எண்ணிக்கையும் 93இல் இருந்து 125 இடமாக உயா்ந்துள்ளது. மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக இதுவரை 20,000 போ் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனா்.

இது தவிர சுகாதாரப் பணியாளா்கள் நோய் கண்டறியும் இடங்களில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் மாவட்டம் முழுவதும் கிருமி நாசினி, கபசுரக் குடிநீா், மூலிகை கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com