நேதாஜி காய்கறி மார்க்கெட் 1-ஆம் தேதி முதல் வ.உ.சி பூங்கா பகுதியில் செயல்படும்? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்

ஈரோடு மாவட்டத்தில் கரோனாவை தடுக்கும் வகையில் ஈரோடு ஆர்.கே.வி.ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் ஈரோடு பேருந்து நிலையத்தில்
நேதாஜி காய்கறி மார்க்கெட் 1-ஆம் தேதி முதல் வ.உ.சி பூங்கா பகுதியில் செயல்படும்? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்

ஈரோடு மாவட்டத்தில் கரோனாவை தடுக்கும் வகையில் ஈரோடு ஆர்.கே.வி.ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் ஈரோடு பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மொத்த வியாபாரமும் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை சில்லரை வியாபாரமும் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயங்க தொடங்கியது. மாற்று இடமாக ஈரோடு வஉசி பூங்கா பகுதியில் ஒரு கோடி மதிப்பில் 700க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தக் கடைகளுக்கு அனைத்தும் மின்சாரம் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில பணிகள் மட்டுமே மீதம் உள்ளது. 

இதையடுத்து வரும் 1ஆம் தேதி முதல் (புதன்கிழமை) வஉசி பூங்கா பகுதியில் நேதாஜி மார்க்கெட் செயல்படும் என தகவல் பரவியது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, வஉசி பூங்கா பகுதியில் தற்போது 700க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. 

அதேபோன்று வியாபாரிகளுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பணிகள் அனைத்தும் முடிவடையும் தருவாயில் உள்ளது. அனேகமாக வரும் 1ஆம் தேதி முதல் வஉசி பூங்கா பகுதியில் காய்கறி மார்க்கெட் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும் தற்போது காய்கறி மார்க்கெட்டில் சில்லரை வியாபாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நேதாஜி காய்கறி மார்க்கெட் வஉசி பூங்கா பகுதிக்கு மாற்றப்பட்டதும் சில்லரை வியாபாரத்திற்கு அனுமதி அளிக்கப்படுமா? என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com