தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் செயலை அனுமதிக்க முடியாது: பாஜக செய்தித் தொடர்பாளர்

தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் செயலை அனுமதிக்க முடியாது என பாஜக செய்தித் தொடர்பாளர் கனகசபாபதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் செயலை அனுமதிக்க முடியாது: பாஜக செய்தித் தொடர்பாளர்

ஈரோடு: தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் செயலை அனுமதிக்க முடியாது என பாஜக செய்தித் தொடர்பாளர் கனகசபாபதி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மாநிலம் முழுவதும் பா.ஜ.க சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது. அதன்படி ஈரோட்டில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் கனகசபாபதி கலந்து கொண்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

"குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்பதை பிரதமர் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் விளக்கம் அளித்துள்ளார். இது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தலைவர் ஸ்டாலின் முகமது அலி ஜின்னாவின் கருத்தைக் கூறி வருவது கண்டிக்கதக்கது. குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. அசாம் பிரச்னை வேறு. இது தொடர்பாக அரசு விளக்கம் அளித்துள்ளதால் யாரும் அச்சப்படத் தேவையில்லை. தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் செயலை அனுமதிக்க முடியாது. திமுக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொய் பிரச்சாரங்களை முறியடிப்போம்.

தமிழக சட்ட பேரவையில் முதல்வர் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக உரிய விளக்கம் அளித்துள்ளார்.

கரூரில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் நிதியுதவி அளித்த விடியோ வெளியாகியுள்ளது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com