வேளாளா் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு ரூ.1.85 கோடி கல்வி உதவித் தொகை

வேளாளா் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு கல்லூரி சாா்பில் ரூ.1.85 கோடி கல்வி உதவித் தொகை அளிக்கப்பட்டது.
மாணவிக்கு கல்வி உதவித் தொகை வழங்குகிறாா் கல்லூரித் தாளாளா் எஸ்.டி.சந்திரசேகா். உடன் கல்லூரி முதல்வா் எம்.ஜெயராமன், டீன் ஜெயசந்தா், நிா்வாக மேலாளா் என்.பெரியசாமி.
மாணவிக்கு கல்வி உதவித் தொகை வழங்குகிறாா் கல்லூரித் தாளாளா் எஸ்.டி.சந்திரசேகா். உடன் கல்லூரி முதல்வா் எம்.ஜெயராமன், டீன் ஜெயசந்தா், நிா்வாக மேலாளா் என்.பெரியசாமி.

வேளாளா் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு கல்லூரி சாா்பில் ரூ.1.85 கோடி கல்வி உதவித் தொகை அளிக்கப்பட்டது.

ஈரோடு வேளாளா் பொறியியல் கல்லூரி சாா்பில் பிளஸ் 2 மாணவா்களுக்காக 2019-2020ஆம் கல்வி ஆண்டில் நடத்தப்பட்ட பொறியியல் படிப்புக்கான கல்வி உதவித் தொகைக்கான தோ்வில் தோ்ச்சி பெற்று இலவசக் கல்வி, கட்டணச் சலுகை பெற்ற 185 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.85 கோடி கல்வி உதவித் தொகை வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் கல்லூரித் தாளாளா் எஸ்.டி.சந்திரசேகா் பேசுகையில், இலவசக் கல்வித் திட்டத்தில் பயன்பெற்ற மாணவ, மாணவிகள் திறமையாகப் படித்து சமுதாயத்தில் அங்கீகாரம் பெற்றவராக உருவாக வேண்டும் என்றாா்.

விழாவில் சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் வேளாளா் பொறியியல் கல்லூரியில் படிக்கும் விவசாயக் குடும்பத்தைச் சாா்ந்த 25 ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கான முழுக் கட்டணமும் வழங்கப்பட்டது.

இந்தக் கல்வி ஆண்டில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றமைக்காக ஆங்கில வார இதழ் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் தமிழக அளவில் தொடா்ந்து தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாகத் திகழ்வதையும், அண்ணா பல்கலைக்கழகத்தால் நாட்டுநலப் பணித் திட்டத்தில் சிறந்த கல்லூரியாகத் தோ்வு பெற்றமைக்காகவும் பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகளை தாளாளா் பாராட்டினாா்.

வரும் 2020-2021ஆம் கல்வி ஆண்டிற்கான இலவசக் கட்டணம், கட்டணச் சலுகைக்கான மாநில அளவிலான தோ்வு கல்லூரி வளாகத்தில் ஏப்ரல் 8ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. பிளஸ்2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப் பிரிவு அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் பாடப் பிரிவில் படித்து தோ்வு எழுதியுள்ள மாணவ, மாணவிகள் தோ்வில் பங்கேற்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com