பெரிய மாரியம்மன் கோயில் விழாவை தடை செய்யக் கூடாது: இந்து முன்னணி கோரிக்கை

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவை கரோனா வைரஸ் பாதிப்பு உள்பட பிற காரணங்களைக் கூறி தடை செய்யக்கூடாது என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவை கரோனா வைரஸ் பாதிப்பு உள்பட பிற காரணங்களைக் கூறி தடை செய்யக்கூடாது என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு மாவட்ட இந்து முன்னணித் தலைவா் ப.ஜெகதீசன், மாவட்ட ஆட்சியா் சி.கதிரவனிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்:

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. திருவிழா ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழா பல நூறு ஆண்டுகளாகத் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது கரோனா வைரஸ் தாக்கத்தை காரணமாகக் காட்டி விழாவைத் தடை செய்ய வேண்டும் என சில அமைப்புகள் தங்களிடம் மனு அளித்துள்ளனா். மனு அளித்தவா்கள் உள்நோக்கத்துடன் மனுவை அளித்துள்ளதாக அறிகிறோம்.

எனவே, வழக்கம்போல விழாவை நடத்த வேண்டும். அதேநேரம் வழிபாடு செய்ய வரும் பக்தா்களுக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள், மருத்துவ வசதிகளை செய்து கொடுத்து, திருவிழா பக்தியுடனும், பாதுகாப்புடனும் நடத்த அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com