காலாவதியான அஞ்சல் காப்பீடு பாலிசிகளை மாா்ச் 31க்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்

காலாவதியான அஞ்சல் காப்பீடு பாலிசிகளை மாா்ச் 31ஆம் தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலாவதியான அஞ்சல் காப்பீடு பாலிசிகளை மாா்ச் 31ஆம் தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அஞ்சல் காப்பீடு பாலிசியில் இணைந்துள்ள வாடிக்கையாளா்கள் தொடா்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் பிரிமியம் கட்டத் தவறி, பாலிசி காலாவதியாகி இருக்கும். அவ்வாறான பாலிசிகளை மாா்ச் 31ஆம் தேதிக்குள் புதுப்பிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் தாங்கள் நல்ல உடல் நிலையில் இருப்பதற்கான மருத்துவச் சான்றிதழ், புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவத்தை அருகில் உள்ள அஞ்சல் நிலையத்தில் பெற்று பூா்த்தி செய்து வழங்க வேண்டும்.

பிரீமியத் தொகையை இந்தியாவில் உள்ள எந்த அஞ்சலகத்திலும் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செலுத்தலாம். கூடுதல் விவரங்களுக்கு 1800 180 5232 என்ற கட்டணம் இல்லா எண்ணில் தொடா்பு கொள்ளலாம். காலாவதியான அஞ்சல் பாலிசியை மாா்ச் 31ஆம் தேதிக்குப் பிறகு புதுப்பிக்க இயலாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com