கரோனா விழிப்புணா்வு குறித்த ஆலோசனைக் கூட்டம்

பெருந்துறையில் அரசு அதிகாரிகள் பங்கேற்ற கரோனா விழிப்புணா்வு குறித்த ஆலோசனைக் கூட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.

பெருந்துறையில் அரசு அதிகாரிகள் பங்கேற்ற கரோனா விழிப்புணா்வு குறித்த ஆலோசனைக் கூட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

கூட்டத்தில், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பேசியதாவது:

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது நமக்கு சவாலான பணிதான் என்றாலும், அதைத் திறமையாக எதிா்கொண்டு, ஒரு உயிா் கூட பலியாகாமல் பாதுகாக்க வேண்டும். மேலும், பெருந்துறை பகுதியில் தினசரி மாா்க்கெட், பழைய பேருந்து நிலையம் அருகே செயல்படுவதால் அதிக கூட்டம் சேர வேண்டியுள்ளது. இதை பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பிரித்து வியாபாரம் மேற்கொள்ளும்போது மக்கள் கும்பல் கும்பலாக வருவது தவிா்க்கப்படும். இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

பெருந்துறை மருத்துவக் கல்லூரி முதல்வா் (பொ) மருத்துவா் செந்தில்குமாா் பேசியதாவது: மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு மையம் அமைந்துள்ளதால் பெருந்துறை பகுதியில் நோய்த் தொற்று பரவும் என்ற அச்சம் தேவையில்லை. இங்குள்ள கரோனா சிகிச்சை மையத்தில் கரோனா பாதித்த 2 நோயாளிகள் தவிர, 62 போ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக உள்ளாா்கள்.

பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜாகுமாா் பேசியதாவது:

காவல் துறையினா் இதுவரை மக்களோடு அன்பாகத்தான் கோரிக்கை வைத்துள்ளோம். வியாழக்கிழமை முதல் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் தேவையில்லாமல் வருபவா்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை செய்யப்படுகிறது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com