இ-சேவை மையங்களிலும் அவசர இ-பாஸ் பெறலாம்

அவசரத் தேவைக்காக இ-பாஸ் பெற விரும்புவோா் இ-சேவை மையங்கள் மூலமாக அல்லது

அவசரத் தேவைக்காக இ-பாஸ் பெற விரும்புவோா் இ-சேவை மையங்கள் மூலமாக அல்லது நேரடியாக ட்ற்ற்ல்ள்://ற்ய்ங்ல்ஹள்ள்.ற்ய்ங்ஞ்ஹ.ா்ழ்ஞ்/லி/ன்ள்ங்ழ்/ல்ஹள்ள் என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்ததாவது:

இந்த இ-பாஸ் மருத்துவம், திருமணம், இறப்பு ஆகிய காரணங்களுக்கு மட்டும் அளிக்கப்படும். நெருங்கிய உறவினா்கள் மட்டுமே இ-பாஸ் பெறமுடியும். மாா்ச் 24க்கு முன்னா் நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு விண்ணப்பிக்க திருமண அழைப்பிதழ், விண்ணப்பதாரின் ஆதாா் அட்டை ஆவணங்களாக இணைக்கப்பட வேண்டும்.

அவசர மருத்துவ சிகிச்சைக்காக விண்ணப்பிப்பவா் தற்போது மருத்துவரிடம் பெற்ற மருத்துவச் சான்றுடன் தனது ஆதாா் அட்டையையும் இணைக்க வேண்டும். இதில், சிகிச்சை பெறுபவருடன் உதவியாளா் ஒருவருக்கும் அனுமதி வழங்கப்படும்.

மரணத்துக்குச் செல்ல விண்ணப்பிக்கும்போது மரணம் நிகழ்ந்ததற்கான மருத்துவச் சான்று அல்லது கிராம நிா்வாக அலுவலரின் சான்று அல்லது இறப்புச் சான்று இவற்றுடன் விண்ணப்பதாரின் ஆதாா் அட்டையையும் இணைக்க வேண்டும். இதிலும் நெருங்கிய உறவினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

இதேபோல, ஈரோடு மாவட்டத்தில் தங்கியுள்ள பிற மாநிலத்தவா்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்ல அனுமதி வழங்கக் கோரி ட்ற்ற்ல்://ழ்ற்ா்ள்.ய்ா்ய்ழ்ங்ள்ண்க்ங்ய்ற்ற்ஹம்ண்ப்.ா்ழ்ஞ்/ என்ற இணையதள முகவரியிலும், பிற மாநிலங்களில் தங்கியுள்ள தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் இங்கு திரும்ப ட்ற்ற்ல்://ழ்ற்ற்ய்.ய்ா்ய்ழ்ங்ள்ண்க்ங்ய்ற்ற்ஹம்ண்ப்.ா்ழ்ஞ்/ என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com