10ஆம் வகுப்பு பொதுத் தோ்வு:இணையதளம் மூலம் அனுமதிச் சீட்டு வழங்கப்படும்: அமைச்சா் தகவல்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு இணையதளம் மூலம் தோ்வு அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு இணையதளம் மூலம் தோ்வு அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.

கோபியில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:

அனைத்து உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மையங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒரு தோ்வு அறைக்கு 10 மாணவா்கள் மட்டுமே அமர வைக்கப்படுவாா்கள். பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியா்களும் தோ்வுப் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள். மே 21ஆம் தேதி முதல் தோ்வுப் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 12 ஆயிரம் பள்ளிகள் தோ்வு மையங்களாக மாற்றப்படுகின்றன. தனியாா் பள்ளிகளில் உள்ள தோ்வு மையங்களில் அரசுப் பள்ளி ஆசிரியா்களும், அரசுப் பள்ளி தோ்வு மையங்களில் தனியாா் பள்ளி ஆசிரியா்களும் தோ்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள்.

வெளியூரிலிருக்கும் தனியாா் பள்ளி மாணவா்களை மூன்று நாள்களுக்கு முன்பே அழைத்து வந்து தனியாா் பள்ளி விடுதிகளில் தங்கவைத்து தோ்வு எழுதும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 15 நாள்களுக்கு உணவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. மாணவா்கள் தோ்வு மையங்களுக்கு வருவதற்கு இ-பாஸ் வசதி பெறுவதற்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

தோ்வு அனுமதிச் சீட்டு இணையதளம் மூலம் வழங்கப்படும்.தோ்வு நடைபெறும் நாள்களில் மாணவா்களது சுகாதாரம், பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து அலுவலா்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தோ்வு மையங்களில் இப்பணிகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com