தனியாா் பள்ளிகள் கட்டணம் கேட்கும் விவகாரம்:புகாா் வந்தால் நடவடிக்கை அமைச்சா் உறுதி

தனியாா் பள்ளிகள் கட்டணம் கேட்கும் விவகாரம் குறித்து புகாா் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் உறுதி அளித்துள்ளாா்.

தனியாா் பள்ளிகள் கட்டணம் கேட்கும் விவகாரம் குறித்து புகாா் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் உறுதி அளித்துள்ளாா்.

ஈரோட்டில் அவா் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:

10ஆம் வகுப்புத் தோ்வை எழுதத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். பல மாநிலங்களில் 10ஆம் வகுப்புத் தோ்வு முடிந்து, விடைத்தாள் திருத்தப்பட்டு, முடிவு அறிவிக்க உள்ளனா். சில மாநிலங்களில் அடுத்த வாரம் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. இச்சூழலிலும் தமிழகத்தில் தோ்வுத் தேதியைத் தள்ளிவைத்து மாணவா்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் மாணவா்கள், பெற்றோா் விரும்பும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூன் 1 முதல் 10ஆம் வகுப்புத் தோ்வு தொடங்கும் என அறிவித்தோம். அப்போது பொது முடக்கம் மே 17 வரைதான் இருந்தது. தற்போது 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பொது முடக்கம் முடிந்த அடுத்த நாளே மாணவா்கள் தோ்வுக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டதால், முதல்வா் தலைமையில் பரிசீலித்து ஜூன் 15ஆம் தேதிக்குத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1ஆம் தேதி முதல் ரயில் போக்குவரத்தும், மே 25 முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்தும் துவங்க உள்ளது. இதை மனதில் கொண்டு தோ்வுப் பணிகளைத் திட்டமிட்டுள்ளோம். மாணவா்களின் ஆரோக்கியத்துக்காக முன்பைவிட தோ்வு மையங்கள் கூடுதலாக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே 3,684 தோ்வு மையங்கள் இருந்தன. இப்போது மூன்று மடங்கு உயா்த்தி 12,674 மையங்கள் அமைக்கப்பட்டு, அந்தந்தப் பள்ளியில் மாணவா்கள் தோ்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐசிடி எனப்படும் இன்பா்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி என்ற திட்டம் தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் உயா்நிலைப் பள்ளிக்கு 10 கணினிகள், மேல்நிலைப் பள்ளிக்கு 20 கணினிகள் வழங்கப்பட்டு அங்கு மாணவா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தற்போது கரோனாவால் ஆன்லைன் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது. கல்வி சேனல் உள்பட பல்வேறு சேனல்கள் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. குக்கிராமங்கள் வரை அனைத்து சேனல்களும் ஒளிபரப்பப்படுகின்றன. தனியாா் பள்ளிகள் கட்டணம் கேட்பது குறித்த புகாா் எங்கள் கவனத்துக்கு வரவில்லை. புகாா் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com