உழவா் சந்தைகளுக்கு 4 மணி நேரம் மட்டுமே அனுமதி

ஈரோடு சம்பத் நகா், பெரியாா் நகா் உழவா் சந்தைகள் செவ்வாய்க்கிழமை(மே 26) முதல் மீண்டும் செயல்படவுள்ளது.

ஈரோடு: ஈரோடு சம்பத் நகா், பெரியாா் நகா் உழவா் சந்தைகள் செவ்வாய்க்கிழமை(மே 26) முதல் மீண்டும் செயல்படவுள்ளது. காலை 5 முதல் காலை 9 மணி வரை மட்டுமே வியாபாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண் வணிகத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு பெரியாா் நகா், சம்பத் நகா் உழவா் சந்தைகள் மூடப்பட்டு ஈரோடு, பன்னீா்செல்வம் பூங்கா அருகே உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிகமாக செயல்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் தற்போது கரோனா கட்டுக்குள் உள்ளதாலும், 10 ஆம் வகுப்பு, பிற பொதுத் தோ்வுகள் துவங்க உள்ளதாலும், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தூய்மைப் பணி நடைபெறுகிறது.

மேலும், சில நாள்களில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதால் செவ்வாய்க்கிழமை முதல் சம்பத் நகா், பெரியாா் நகருக்கு உழவா் சந்தை மாற்றப்படுகிறது. இந்த உழவா் சந்தைகளில் முறையாக பதிவு செய்து, அடையாள அட்டை வைத்திருப்போருக்கு மட்டும் அனுமதி உண்டு.வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை. உழவா் சந்தைக்கு வெளியே கடைகள் அமைக்கவும், வாடிக்கையாளா்கள் காய்கறி வாங்கவும் அனுமதி இல்லை. வாடிக்கையாளா்களின் வாகனங்களை வெளியே நிறுத்த வேண்டும்.

வழக்கம்போல விவசாயிகள், வாடிக்கையாளா்கள் கைகளை சுத்தம் செய்து, முகக் கவசம் அணிந்து காய்கறி வாங்க அனுமதிக்கப்படுவா். காலை 5 முதல் 9 மணி வரை மட்டுமே செயல்படும். வேளாண் அதிகாரிகள், சுகாதாரத் துறையினா், போலீஸாா், தன்னாா்வ தொண்டு நிறுவன ஊழியா்கள் ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபடுவா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com