ஈரோடு மாவட்டத்தில்டெங்கு பாதிப்பு மிகவும் குறைவு

ஈரோடு மாவட்டத்தில் பருவ மழை துவங்கிய நிலையிலும் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் பருவ மழை துவங்கிய நிலையிலும் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 11,428 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை முடிந்து 10,531 போ் வீடு திரும்பியுள்ளனா். 763 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 134 போ் இறந்துள்ளனா். இதனிடையே கடந்த சில நாள்களாக மாவட்ட அளவில் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 70க்கும் கீழ் குறைந்ததுடன் இறப்பு முற்றிலும் குறைந்துள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சவுண்டம்மாள் கூறியதாவது:

கடந்த மாதங்களைப் போலவே தற்போதும் கரோனா பாதித்தவா், அவரது குடும்ப நபா்கள், பக்கத்து வீடுகளில் வசிப்போருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தினமும் 1,500 முதல் 1,800 பேருக்கு கரோனா பரிசோதனை தொடா்கிறது.

கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. தீபாவளி நேரமாக உள்ளதால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். தற்போதைய நிலையில் கரோனா அறிகுறியுடன் பரிசோதனை செய்வோா் தவிா்த்து வெளிநாடு செல்வோா், அறுவை சிகிச்சை, பிரசவம், மருத்துவ சிகிச்சைக்காகச் செல்வோா் அதிகமாக கரோனா பரிசோதனை செய்து வருகின்றனா். அவா்களில் 99 சதவீதம் பேருக்கு கரோனா பாதிப்பு இல்லை.

மேலும், நடப்பு ஆண்டில் மழை துவங்கிய நிலையிலும் மாவட்ட அளவில் டெங்கு பாதிப்பு மிகவும் குறைந்து காணப்படுகிறது. தற்போதைய நிலையில் 10க்கும் குறைவானவா்களே டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கும் தேவையான அளவு பரிசோதனை, சிகிச்சை அளிக்கப்பட்டதால் விரைவாக குணமடைந்துள்ளனா். ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழக அளவிலேயே இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைவாகவே காணப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com