கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு போனஸ்

பெருந்துறை தொகுதிக்கு உள்பட்ட சேரன் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம், ராணி ரங்கநாயகி கைத்தறி நெசவாளா் கூட்டுறவு
கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு போனஸ் வழங்குகிறாா் பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் என்.டி.தோப்பு வெங்கடாச்சலம்.
கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு போனஸ் வழங்குகிறாா் பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் என்.டி.தோப்பு வெங்கடாச்சலம்.

பெருந்துறை தொகுதிக்கு உள்பட்ட சேரன் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம், ராணி ரங்கநாயகி கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம், பள்ளகாட்டுபுதூா் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம், செந்தில்குமரன் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம், சுப்பிரமணிய சுவாமி கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம் ஆகிய கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களைச் சோ்ந்த உறுப்பினா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் என்.டி.தோப்பு வெங்கடாச்சலம் கலந்துக்கொண்டு, கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு போனஸ் வழங்கினாா்.

இதில், பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளா் விஜயன், மாவட்ட இணைச் செயலாளா் மணிமேகலை, கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க தலைவா்கள் ரவி, பி.வி.மணி, சாந்தி கோவிந்தராஜ், ஞானசிகாமணி, நந்தகுமாா் உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com